1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 13 டிசம்பர் 2023 (18:28 IST)

பால் கொள்முதல் விலையேற்றத்துக்கு பாஜக வரவேற்பு- அண்ணாமலை

பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35ல் இருந்து  ரூ.38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ல் இருந்து ரூ.47 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பால் கொள்முதல் விலையேற்றத்திற்காக அறிவிப்பை பாஜக வரவேற்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35ல் இருந்து  ரூ.38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ல் இருந்து ரூ.47 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
கொள்முதல் விலை உயர்வு மூலம் 4  லட்சம் பால் உற்பத்தியாளர்கள்  பயனடைவர் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த  நிலையில், இந்தப் பால் கொள்முதல் விலையேற்றத்திற்காக அறிவிப்பை பாஜக வரவேற்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:

‘’கடினமாக உழைக்கும் தமிழக விவசாயிகளின் சார்பாக நாங்கள் முன்வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று,  பால் கொள்முதல் விலை ஏற்றத்திற்கான அறிவிப்பை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த பால் கொள்முதல் விலையேற்றத்திற்கான அறிவிப்பை  தமிழக பாஜக   வரவேற்கிறது.

தற்போதுள்ள பால் கொள்முதல் அளவு முந்தைய ஆட்சிக் காலத்தை ஒப்பிடும் பொழுது குறைவாக உள்ளது என்பதையும்  தமிழக பாஜக தொடர்ச்சியாக கோடிட்டுக் காட்டி வருகிறது. முன்பைப் போல் சராசரியாக ஒரு நாளில் குறைந்தபட்சம் 36 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்ய வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

மேலும், கொழுப்புச்சத்து குறைந்த பாலுக்கு புதிய வண்ண பாக்கெட்டில் பழைய விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய முற்படுவது போன்ற நடவடிக்கைகளை இந்த அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று  தமிழக பாஜக சார்பாக கேட்டுக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.