புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (10:04 IST)

புரட்டாசி எதிரொலி... ஏகத்துக்கும் குறைந்த கோழி & முட்டை

புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதில்லை என்பதால் முட்டை மட்டுமின்றி அசைவ கறிகளின் விலையும் குறைந்துள்ளது. 

 
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை முட்டை விலை உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்ததிலிருந்தே முட்டை விலை வீழ்ச்சி அடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.43.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
புரட்டாசி மாதம்  என்பதால் முட்டைகள் தேக்கமடைந்து விலை குறைந்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். சென்னையில் ஒரு முட்டை விலை ரூ.4.65 ஆக உள்ளது. கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.119-க்கு விற்பனை செய்யப்படுகிறது.