1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:14 IST)

குடியாத்தம் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் மூவர் காயம்!

குடியாத்தம் பகுதியில் சிறுத்தை ஒன்று நள்ளிரவில் வந்து தாக்கியதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் பகுதிக்கருகே காட்டுக்கு அருகே அமைந்துள்ள பகுதிகளில் இருந்து சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது. அப்போது அந்த சிறுத்தை தாக்கியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் அலையும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.