ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (12:12 IST)

சென்னை இளைஞர் அடித்து கொலை: பீஸ்ட் படம் காரணமா?

murder
சென்னை இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதற்கு பீஸ்ட்  படம் தான் காரணம் என தெரியவந்துள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் லோகேஷ் என்பவர் சென்னை அம்பத்தூரில் உள்ள திரையரங்கில் பீஸ்ட் படத்தை பார்த்துள்ளார். அப்போது அவருக்கும் ஒரு கும்பலுக்கும் இடையே தியேட்டரில் சண்டை வந்து உள்ளது 
 
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நேற்று வேலை முடிந்து லோகேஷ் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார் 
 
இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்தபோது 10 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது பீஸ்ட் படம் பார்க்கும் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்கள். இந்த தகவல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது