திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (09:42 IST)

தண்ணியில வேலைன்னு சொன்னத நம்பி…! – சென்னையில் நூதன மோசடி!

சென்னையில் கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த வினோத் என்பவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னதாக முகநூலில் ஒரு வேலைவாய்ப்பு விளம்பரத்தை அவர் பார்த்துள்ளார். அதில் பயணிகள் சொகுசு கப்பலில் பணிபுரிய ஆட்கள் தேவையென்றும், கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதை நம்பி நுங்கம்பாக்கத்தில் செயல்படும் வேலைவாய்ப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் ரூ.1 லட்சம் செலுத்தினால் உறுதியாக வேலை கிடைக்கும் என கூறியுள்ளார்கள். அவர் பணம் செலுத்தியதும் நேர்காணல் நடந்துள்ளது. ஆனால் பணிக்கு அவரை சேர்க்கவில்லை. இதேபோல மேலும் பலரும் பணம் கட்டியது தெரிய வந்த நிலையில் இதுகுறித்து சம்பந்தபட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் புகார் அளித்துள்ளார்.