வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 2 டிசம்பர் 2021 (07:23 IST)

சரவணா ஸ்டோரில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரிசோதனை!

சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்களில் நேற்று திடீரென வருமானத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் என்று வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இன்று 2-வது நாளிலும் இந்த சோதனை தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சென்னை புரசைவாக்கம், தி நகர், போரூர், குரோம்பேட்டை ஆகிய பகுதியில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடை மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது
 
இந்த சோதனை இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.அது மட்டுமின்றி கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்திலும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன கணக்கில் வராத தொகை கைப்பற்றப்பட்டதாக என்பது குறித்து இன்று தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது