நிரூபிக்க தயார்!! ஸ்டாலின் சவாலுக்கு தமிழிசை பகிரங்க பேட்டி!

Tamilisai
Last Modified புதன், 15 மே 2019 (08:47 IST)
தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஸ்டாலின் பாஜகவிடம் பேசியதை நிரூபிப்பேன் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் டெல்லியில் உள்ள பாஜகவுக்கு தூது விட்டு 5 கேபினட் அமைச்சர்கள் பதவிக் கேட்டுள்ளனர் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர் இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேட்கப்பட்டது. தமிழிசை இந்த தகவலை உண்மை என ஒப்புக்கொண்டார். 
 
எனவே திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பாஜகவுடன் நான் பேசியதை நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகத் தயார். நிரூபிக்க தவறினால் தமிழிசை, மோடி ஆகியோர் அரசியலைவிட்டு விலகத்தயாரா? என கேட்டுள்ளார். 
stalin
அதோடு, பொய் பேட்டியை அளித்ததன் மூலம் தமிழிசை தன்னை தரம் தாழ்த்திக்கொண்டார். பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை பொய் பேட்டி அளித்ததற்காக வேதனைப்படுகிறேன் என்றும் ஸ்டாலின் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். 
 
இந்நிலையில் இதற்கு பதிலளித்த தமிழிசை பின்வருமாறு பேசினார், தப்புக்கணக்கு போட தமிழகத்தில் ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது மு.க.ஸ்டாலின்தான். நான் சொல்வதில் எப்போதுமே உண்மை இல்லாமல் இருக்காது. 
 
பொய் சொல்லாத, ஊழல் இல்லாத அரசியல் பாரம்பரியம் எனது. அதேபோல், அரசியலில் எந்த காலக்கட்டத்தில் ஸ்டாலின் கேட்டதை நிரூபிக்க வேண்டுமோ அப்போது நிரூபிப்பேன் என்று பேட்டியளித்து பரபரப்பை கூட்டியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :