செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 13 மே 2019 (21:17 IST)

புதுப்பிள்ளையை கொலை செய்த மாமனார் : திடுக்கிடும் சம்பவம்

மயிலாடுதுறை அருகே காதல் தம்பதிகளிடையே ஏற்பட்ட சண்டையால் தனது மாப்பிள்ளையையே கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை அப்பராசபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் கலைமதி பட்டபடிப்பு முடித்து அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தலைச்சங்காடு பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் என்பவருக்கும் காதல் உண்டானது. பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணமும் நடைபெற்றது. 
 
சிறிது காலத்திற்கு பிறகு குழந்தை பெற்று கொள்வதில் தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. குழந்தை வேண்டும் என்று கலைமதி கேட்க, இப்போது வேண்டாம் என மறுத்து வந்துள்ளார் சதீஷ். இருவருக்கும் சண்டை அதிகமாகவே கலைமதியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருமணம் முடிந்து 5 மாதங்களே ஆகியிருப்பதால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி போளீஸார் அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர். அதற்கு பிறகு கலைமதி தனது பெற்றோர்களுடனே வாழ்ந்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் நேற்று மதியம் தனது உறவினரை பார்க்க அப்பராசப்புதூர் வந்த சதீஷ்குமார் வழியில் தனது மாமனார் நாகராஜை சந்தித்துள்ளார். தனது மனைவியை தன்னோடு அனுப்பிவைக்கும்படி தகராறு செய்துள்ளார் சதீஷ். ஆத்திரம் அடைந்த நாகராஜ் தனது கையிலிருந்த கத்தியை கொண்டு சதீஷை குத்தியதோடு, அருகில் கிடந்த இரும்பு கம்பியை கொண்டு தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சதீஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சதீஷ் குடும்பத்தினர் புகார் அளித்ததை தொடர்ந்து காவல் துறையினர் நாகராஜை கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.