திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (10:31 IST)

கிண்டலுக்கு உள்ளான பிங்க் பஸ்..! – முழுவதும் பிங்க் ஆக்கிய அரசு!

Pink Bus
சமீபத்தில் சென்னை மாநகர போக்குவரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிங்க் பஸ்ஸை முழுவதுமாக பிங்க் ஆக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ளூர் சாதாரண பேருந்துகளில் பெண்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் மாற்று பாலினத்தார் உள்ளிட்டோர் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை தமிழக அரசு சில மாதங்கள் முன்னதாக அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தால் பலரும் பலனடைந்து வருகின்றனர். சில சமயம் பெண்கள் இலவச பேருந்து என நினைத்து டீலக்ஸ் மற்றும் சொகுசு பேருந்துகளில் ஏறிவிடுவதும் நடக்கிறது. இதனால் இலவச பேருந்தை அடையாளம் காணும் விதமாக அதற்கு பிங்க் கலர் வண்ணம் பூசப்பட்டது.

ஆனால் பேருந்தின் முகப்பு மற்றும் பின்புறத்திற்கு மட்டுமே பிங்க் அடிக்கப்பட்டிருந்தது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளானது. இந்நிலையில் இலவச பேருந்துகள் அனைத்திற்கும் முழுவதுமாக பிங்க் நிறம் அடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முழுமையாக பிங்க் நிறத்தில் உள்ள பஸ் அழகாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.