வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2019 (11:59 IST)

அதிகமாகும் வாகன விதிமீறல்கள் – வருகிறது பாய்ண்டிங் சிஸ்டம் !

தமிழகத்தில் வாகன விதிமீறல்களை தடுக்கும் பொருட்டு பாய்ண்ட் சிஸ்டத்தினைக் கொண்டு வர உள்ளது போக்குவரத்துக் காவல்துறை.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற நகரங்களில் வாகன விதிமீறல்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க தமிழக போக்குவரத்துக் காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அடுத்து தற்போது பாய்ண்ட் சிஸ்டத்தைக் கொண்டுவர உள்ளது.

இதன் படி ஒவ்வொரு முறை விதிமீறலில் ஈடுபடும்போதும் 2 புள்ளிகள் கொடுக்கப்படும். 5 முறைக்கு மேல் விதிமீறலில் ஈடுபடும் நபரின் வாகன உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த பாய்ண்ட் சிஸ்டம் விரைவில் சென்னைக்கு அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.