1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 ஜூலை 2022 (21:16 IST)

செஸ் ஒலிம்பியாட் போட்டி: நாளை முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம்

traffic
செஸ் ஒலிம்பியாட் போட்டி காரணமாக நாளை முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது
 
உலக செஸ்‌ ஒலிம்பியட்‌ போட்டியின்‌ விளம்பர நிகழ்வை ஒட்டி 07.07.2022 அன்று அதிகாலை 4 மணி முதல்‌ காலை 9 மணி வரை நேப்பியர்‌ பாலத்தில்‌ நடைபெறுவதால்‌ கீழ்கண்ட போக்குவரத்து திசைத்திருப்பங்கள்‌ செய்யப்படுகிறது :
 
இராஜாஜி சாலையில்‌ இருந்து நேப்பியர்‌ பாலம்‌ வழியாக காமராஜர்‌ சாலை செல்லும்‌ வாகனங்கள்‌ அனைத்தும்‌ போர்‌ நினைவு சின்னத்தில்‌ இருந்து வலது புறம்‌ திரும்பி கொடி
மரச்சாலை வழியாக வாலாஜா - அண்ணாசாலை -  மன்ரோசிலை - பல்லவன்‌ - பெரியார்‌ சிலை - அண்ணாசிலை - இடது புறம்‌ - வாலாஜா சாலை - வலது புறம்‌ - உழைப்பாளர்‌ சிலை வழியாக காமராஜர்‌ சாலை செல்லலாம்‌
 
காமராஜர்‌ சாலை இருந்து நேப்பியர்‌ பாலம்‌ வழியாக இராஜாஜி சாலை செல்லும்‌ வாகனங்கள்‌ அனைத்தும்‌ உழைப்பாளர்‌ சிலை - வாலாஜாசாலை - அண்ணாசிலை -
அண்ணாசாலை - பெரியார்‌ சிலை - பல்லவன்‌  - மன்ரோ சிலை - வாலாஜா - கொடி மரச்சாலை - போர்‌ நினைவு சின்னம்‌ வழியாக இராஜாஜி சாலை செல்லலாம்‌
 
வாகன ஒட்டிகள்‌ அதற்கேற்ப திட்டமிட்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.