1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain in 11 districts within three hours says chennai meteorological center

அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு!

Rain
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்யும் நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவிப்பு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தமிழகத்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான தட்பவெப்பநிலை காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
சமையல் எரிவாயு விலை நியாயமே இல்லை: அன்புமணி ராமதாஸ்