1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:29 IST)

நாளை மறுநாள் முதல் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

நாளை மறுநாள் பிரதமர் மோடி சென்னை நெல்லை வந்தே பாரத ரயிலை தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த ரயில்  நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு  7 மணி 50 நிமிடங்கள் பயணம் செய்து மதியம் 1.50 மணிக்கு எழும்பூர் நிலையத்திற்கு வரும். 
 
அதேபோல் எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ஐந்து நிலையங்களில் மட்டுமே நிற்கும்.

ஏற்கனவே சென்னையிலிருந்து சென்னை - பெங்களூரு மற்றும் சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது சென்னையிலிருந்து மூன்றாவதாக நெல்லைக்கு வந்தே பாரத் இயக்கப்பட உள்ளது. மேலும் சென்னை - கோவை அடுத்து தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும்.
 
செவ்வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இந்த ரயில் சேவை இருக்கும். இந்த நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்யும் கட்டணம் குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் இருந்து நெல்லைக்கு இந்த ரயிலில் ஏ.சி. சேர்கார் பெட்டியில் பயணம் செய்ய கட்டணம் ரூ.1620ம் எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியில் பயணம் செய்ய கட்டணம் ரூ..3025ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran