சென்னை புறநகர் ரயில் சேவைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்றும், நாளையும் சென்னை செண்ட்ரல் - கும்மிடுபூண்டி, சூலூர்பேட்டை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் சீரமைப்பு பணிகளுக்காக இன்று காலை 9.50 மணி முதல் மதியம் 3.50 மணி வரை சென்னை செண்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னேரி வரை மட்டும் கணிசமான அளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னை செண்ட்ரலில் இருந்து காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35 ஆகிய நேர அட்டவணையில் கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.55, 11.25, 12.00, 1.00, 2.30, 3.15 ஆகிய நேர அட்டவணையில் புறப்பட்டு செண்ட்ரல் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
நாளை சென்னை செண்ட்ரலில் இருந்து காலை 8.35, 10.15 ஆகிய நேர அட்டவணையில் சூலூர்ப்பேட்டை செல்லும் ரயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து காலை 11.45, 1.15 ஆகிய நேர அட்டவணையில் செண்ட்ரல் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து 9.40, 12.40க்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும், 10.55க்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்கரை வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து நாளை காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்
Edit by Prasanth.K