1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 டிசம்பர் 2020 (19:31 IST)

டிசம்பர் 7 முதல் புறநகர் ரயில் சேவை எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் கடந்த சில மாதங்களாக புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் புறநகர் ரயில் சேவை தொடங்கியது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது டிசம்பர் 7 முதல் இந்த ரயில் சேவை அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னை புறநகர் ரயில்சேவையின் எண்ணிக்கை டிசம்பர் 7 முதல் 244ல் இருந்து 320 ஆக அதிகரிக்க உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
மேலும் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பெண்கள் தவிர மற்ற பெண்கள் காலை ஏழு மணி முதல் ஒன்பது முப்பது மணி வரையிலும், மாலை நான்கு முப்பது முதல் 7 மணி வரையிலும் பயணம் செய்யலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது