1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 15 நவம்பர் 2020 (16:23 IST)

சென்னை செளகார்பேட்டை கொலை: கைதான மூவர் சிறையில் அடைப்பு!

சென்னை செளகார்பேட்டை கொலை: கைதான மூவர் சிறையில் அடைப்பு!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை செய்ததில் அந்த குடும்பத்தின் மருமகள்தான் தனது சகோதரர்கள் உதவியுடன் இந்த கொலையை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது 
 
அதுமட்டுமின்றி தனிப்படையினர் மூவரையும் புனேவில் வைத்து கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் கொலையில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான மூவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவரையும் நவம்பர் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது
 
இதனை அடுத்து சென்னை சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது