வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 15 நவம்பர் 2020 (10:17 IST)

தீபாவளி மதுவிற்பனை ரூ.469.79 கோடி: சென்னையை முந்திய மதுரை!

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகையின் போது குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது அதிக அளவில் மது விற்பனை நடைபெறும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரூபாய் 469.79 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
அதிகபட்சமாக தீபாவளி அன்றான நேற்று மதுரையில் ரூபாய் 52.70 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. அடுத்ததாக சென்னையில் ரூபாய் 50.11 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி மது விற்பனையை பொருத்தவரையில் சென்னையை மதுரை முந்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் மதுரை மண்டலத்தில் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் ரூபாய் 103.82 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாகவும் அதே தினங்களில் சென்னை மண்டலத்தில் ரூபாய் 94.36 கோடிக்கு மட்டுமே விற்பனையானது ஆகவும் இதனால் இந்த ஆண்டு தீபாவளி மது விற்பனையில் மதுரை மண்டலம் சாதனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன