திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (13:42 IST)

தமிழக ஆளுனரிடம் அரசியல் பற்றி விவாதித்தேன்- நடிகர் ரஜினிகாந்த்

தமிழக ஆளுநரால் ஆர்.என். ரவி அவர்களை சந்தித்த   நடிகர் ரஜினிகாந்த், அரசியல் பற்றி பேசியதாகத் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்தாண்டு வரை அரசியல்  கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்த நிலையில், உடல் நலக்குறைவை அடுத்து,  அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்றும் தன் ரசிகர்கள் விருப்பப்பட்ட அரசியல் கட்சிகளில் சேரலாம் என தெரிவித்தார்.

இதையடுத்து, சினிமாவில் முழு கவனம் செலுத்தி வரும் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்கிடையே, இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்று வந்தார். இந்த நிலையில், இன்றூ, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை நடிகர் ரஜினிகாந்த் சற்றுமுன் சந்தித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பு முடிந்தபின், செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு இது. கவர்னர் ஆர்.என். ரவியுடன் 30 நிமிடங்கள் பேசினேன். தமிழகத்திலுள்ள ஆன்மிகமும், தமிழர்களின் உழைப்பு, நேர்மை ஆகியவற்றைப் பற்றி பெருமையாகப் பேசினார்.

இந்த சந்திப்பில் அவருடன் அரசியல் பற்றி விவாத்தித்தேன். அது என்ன என்று என்னால் கூறமுடியாது.  எனக்கு அரசியலுக்கு வரும் திட்டமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  ஜெயிலர் பட ஷூட்டிங் வர்ம் 15 ஆம் தேதி அல்லது  22 ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.