ரவுடியை துப்பாக்கியால் சுட்ட போலீசார்.. அதிகாலையில் சென்னையில் பரபரப்பு..!
சென்னையில் ஒரு ரவுடியை சுற்றி வளைத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் அதிகாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதை பொருட்கள் கடத்தல், வன்முறை, கூலிப்படையாக செயல்படுதல், கொலை, கொள்ளை என சென்னையில் பல்வேறு குற்றங்கள் நடந்து வரும் நிலையில், போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்ற ரவுடி பதுங்கி இருக்கும் இடம் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அந்த தகவலை அறிந்த உடனே, போலீசார் அந்த ரவுடி இருக்கும் இடத்தை சுற்றி வளைத்தனர். அந்த நேரத்தில், அறிவழகன் தப்பி செல்ல முயன்றபோது, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்த ரவுடி அறிவழகன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரம்பூர் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலையில் திடீரென போலீஸ் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் குறித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva