1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 டிசம்பர் 2024 (12:16 IST)

பல பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னன்! முதலிரவு அறையில் மாப்பிள்ளையை லாக் செய்த மணமகள்!

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட தனது கணவன் ஒரு மோசடி பேர்வழி என கண்டுபிடித்த மணமகள், அவரை போலீஸில் பிடித்துக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்ந்த லிஜின் என்ற இளைஞருக்கும், சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பொறியாளராக பணிபுரியும் பெண்ணுக்கு இருவீட்டார் ஏற்பாட்டின் பேரில் கடந்த 2ம் தேதி திருமணம் நடந்துள்ளது. சென்னையில் இந்த திருமணம் நடந்தபோது பெண் ஒருவர் லிஜின் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக திருமண மண்டபத்தில் வந்து கூச்சலிட்டு பிரச்சினை செய்துள்ளார்.

 

ஆனால் அங்கிருந்தவர்கள் அவரை சமாளித்து அனுப்பிவிட்டு திருமணத்தை நடத்தியுள்ளனர். ஆனால் மணப்பெண்ணுக்கும் அவரது வீட்டாருக்கும் லிஜின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் முதலிரவு அன்று லிஜினின் மொபைலை மணப்பெண் சோதித்த போது அதில் சமூக வலைதளங்கள் வழியாகவும், வாட்ஸப் வழியாகவும் பல பெண்களிடம் அவர் ஆபாசமாக பேசியிருந்தது, சில வீடியோக்கள் உள்ளிட்டவற்றை கண்டு மணப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

இந்நிலையில் தங்களை நம்ப வைத்து ஏமாற்றி மகளை லிஜின் திருமணம் செய்துள்ளதாக மணப்பெண்ணின் குடும்பத்தார் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் லிஜினை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

விசாரணையில், 2019ம் ஆண்டில் காரைக்கால் பெண்ணை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கியது, அதை ஈடுகட்ட ரூ.5 லட்சம் கொடுத்தது, கடலூரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி ஏமாற்றியது என பல உண்மைகள் ஒன்றன்பின் ஒன்றாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K