செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (16:07 IST)

சென்னையின் 8 இடங்களை லாக் செய்த காவல்துறை: அதிர்ச்சி தகவல்

சென்னையின் 8 இடங்களை லாக் செய்த காவல்துறை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு உத்தரவை சரியானபடி மதிக்காதது, சமூக விலகலை அனைவரும் கடைபிடிக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியவர்களாலும் அதிகளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது
 
இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதித்த 8 இடங்களை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக காவல்துறை அறிவித்துள்ளது. புளியந்தோப்பு, எண்ணூர், தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், முத்தியால்பேட்டை, புதுப்பேட்டை, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எட்டு பகுதிகளையும் முழுமையாக லாக் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்,.
 
ஏற்கனவே புதுப்பேட்டையில் உள்ள அனைத்து தெருக்களையும் லாக் செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தியதாக செய்திகள் வெளிவந்தன. அதேபோல் மற்ற பகுதிகளின் தெருக்களும் லாக் செய்ய வாய்ப்பு இருக்கின்றதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.