ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (15:12 IST)

விளக்கு ஏத்த நாங்க ரெடி... பட் ஒரு கண்டீஷன் ப.சிதம்பரம் டிவிட்!!

ஏப்ரல் ஐந்தாம் தேதி விளக்குகளை ஏற்றுகிறோம் என ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 10 நாட்கள் இன்றுடன் முடிவடைகிறது. பத்து நாட்கள் முடிவடைவதை தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  
 
அதில் அவர் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனித்தனியாக இருந்தாலும் 130 கோடி மக்களும் ஒற்றுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ஏப்ரல் 5 ஆம் தேதி மிகவும் முக்கியமான நாள் என்றும் அன்று இரவு 9 மணிக்கு மக்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 
 
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம். ஏப்ரல் ஐந்தாம் தேதி விளக்குகளை ஏற்றுகிறோம். பதிலுக்கு தயவுசெய்து நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். தொற்றுநோய் நிபுணர்கள், பொருளாதார நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.