5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாஸ்க் அவசியமில்லை! – மத்திய அரசு!
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு குழந்தைகளுக்கான புதிய வழிகாட்டு முறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை. 6 முதல் 11 வயதிற்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் மேற்பார்வையின் கீழ் குழந்தைகள் திறனை பொறுத்து முக கவசம் அணியலாம்.
குழந்தைகளுக்கு நோய்தொற்றின் சந்தேகம் இல்லாவிட்டால் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கக்கூடாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரத்தம் உறைதல் அபாயத்தை கண்காணிக்க வேண்டும்.
ஸ்டீராய்டு மருந்துகளை சரியான நேரத்தில், சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். றிகுறியற்ற அல்லது லேசான தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழக்கமான குழந்தை பராமரிப்பு, பொருத்தமான தடுப்பூசி (தகுதி இருந்தால்), ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் உளவியல் ஆதரவு ஆகியவற்றை பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.