வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 10 ஜனவரி 2022 (10:59 IST)

ஆன்லைன் ரம்மியால் சென்னையில் இன்னொருவர் பலி!

ஆன்லைன் ரம்மி உள்பட ஆன்லைன் விளையாட்டுகளால் பல உயிர்கள் பலியாகி வருகிறது என்பதும் சமீபத்தில் கூட மணிகண்டன் என்ற வங்கி அதிகாரி தனது குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இன்னொரு சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற 41 வயது நபர் கடந்த சில நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி ஏராளமான பணத்தை இழந்துள்ளார். இதனை அடுத்து கடனாளி ஆகியுள்ள அவர் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் இதனையடுத்து அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது