செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 2 செப்டம்பர் 2024 (12:38 IST)

3 நாட்களாக முடங்கியிருந்த பாஸ்போர்ட் இணையதள சேவை.. இப்போதைய நிலை என்ன?

3 நாட்களாக முடங்கியிருந்த பாஸ்போர்ட் இணையதள சேவை.. இப்போதைய நிலை என்ன?
கடந்த மூன்று நாட்களாக பாஸ்போர்ட் இணையதள சேவை முடங்கி இருந்த நிலையில் இன்று முதல் சீரானது என தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 29ஆம் தேதி இரவு 8 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பாஸ்போர்ட் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக மூன்று நாட்களாக முடக்கி வைக்கப்பட்ட பாஸ்போர்ட் இணையதள சேவை தற்போது சீரானதாகவும் இன்று காலை முதல் இந்த இணையதளம் பயன்பாட்டுக்கு வந்தது என்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 30ஆம் தேதி நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த நேர்காணல் குறித்த தகவல் எஸ்எம்எஸ் மூலம் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களாக முடங்கி இருந்த பாஸ்போர்ட் இணையதள சேவை தற்போது சீரானதை அடுத்து பாஸ்போர்ட் எடுக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva