1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (14:33 IST)

சென்னை மெட்ரோ ரயிலில்... சினிமா, கேளிக்கை காணொளி பார்க்கும் வசதி !

சென்னை மெட்ரோ ரயிலில்... சினிமா, கேளிக்கை காணொளி பார்க்கும் வசதி !

சென்னை மெட்ரோ ரயிலில் சினிமா, உள்ளிட்ட பல கேளிக்கை காணொளிகளை பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை, மெட்ரோ நிர்வாகம் உருவாகவுள்ள சுகர்பாக்ஸ் என்ற ஆப் மூலம் பல்வேறு காணொளிகளை காணமுடியும் என்றும், மெட்ரோ ரயிலில் உள்ள வைஃபை வசதியைப் பயன்படுத்தி சுகர்பாக்ஸ் என்ற செயலியில் இருந்து பதிவிடப்பட்ட காணொளிகளைப் பயணிகள் கண்டு ரசித்துச் செல்லலாம் என தெரிவித்துள்ளது.
 
குறிப்பாக இந்தக் காணொளியில், தமிழ், தெலுங்கு, கன்னம், ஆங்கிலம், உள்ளிட்ட பல மொழிகளில் காணொளிகள் இந்த சுகர் பாக்ஸில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த  சுகர் பாக்ஸ் செயலியில்  ஆண்ட்ராய்டு , ஐஓஎஸ் ஆகிய இயங்குதளங்களில் செயல்படும் என தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக இந்தக் காணொளி வசதி சென்னை செண்ட்ரல் முதல் விமான நிலையம் வரை செல்லும் எனவும் அதன்பிறகு அனைத்து வழித்தடங்களில் அறிமுகமாகும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.