1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Tatkal Train Ticket Booking Now Possible with e-Aadhaar Authentication

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

இ ஆதார்
ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவை செய்து வரும் நிலையில், பயணம் செய்வதற்கு ஒரு நாள் முன்பு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ‘தட்கல் முறை’ சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால், இந்த முறையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல், பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
 
இணையதளம் மெதுவாக இருப்பது உள்பட சில தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும், காலை 10 மணிக்கு தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய காத்திருந்தாலும், 90% பேருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த நிலையில், தட்கல் டிக்கெட்டை எளிதாக பெறும் வகையில், இ-ஆதார் மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகமாகிறது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
 
தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, இ-ஆதார் கட்டாயம் என்ற முறை கொண்டு வரப்படும் என்றும், இதன் மூலம் போலியாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
 
 
Edited by Mahendran
 
அடுத்த கட்டுரையில்
ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைச்சாமி, ராமதாஸ் வீட்டிற்கு வருகை.. தீவிர ஆலோசனை..!