Daily Horoscope
✕

மெட்ரோ பணிகள் எதிரொலி: சென்னையில் 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்ஹ்டு மாற்றம்!

Written By Mahendran
Updated: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (11:56 IST)
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த பணிகள் காரணமாக சென்னையில் உள்ள ஒரு சில சாலைகளில் மூன்று ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
கச்சேரி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் நாளை முதல் 3 ஆண்டுகளுக்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 
1. முண்டக்கன்னி அம்மன் கோயில் தெருவில் இருந்து கச்சேரி சாலைக்கு வாகனங்கள் செல்வதைக் கட்டுப்படுத்தி கல்விவாரு தெருவில் தற்போதுள்ள ஒரு வழிப்பாதை அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு, வாகனங்கள் கச்சேரி சாலையில் இருந்து முண்டக்கன்னி அம்மன் கோயில் தெருவிற்கு அனுமதிக்கப்படும்.
 
2. லஸ் சந்திப்பிலிருந்து கச்சேரி சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலையை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, கல்விவாரு தெரு முண்டக்கன்னி அம்மன் கோயில் தெரு மற்றும் பஜார் சாலை வழியாக செல்லலாம்.
 
3. சாந்தோம் நெடுஞ்சாலையிலிருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, தேரடி தெரு, நடு தெரு மற்றும் ஆர்.கே.மட் சாலை (அல்லது) மாதா சர்ச் சாலை வழியாகவும் செல்லலாம்.
 
4. மாநகர் பேருந்து 12- பி லஸ் சந்திப்பிலிருந்து கச்சேரி சாலை வழியாக போர் ஷோர் எஸ்டேட் பேருந்து நிலையம் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டை நெடுஞ்சாலை டாக்டர் ராதாகி ருஷ்ணன் சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாகவும் திரும்பி வரும் போது, வி.எம்.தெரு வரை வழக்கம் போல் வந்து டி.டி. கே சாலை வழியாக செல்ல வேண்டும்.
 
5. மாநகர் பேருந்து 12 எக்ஸ், லஸ் சந்திப்பிலிருந்து கச்சேரி சாலை வழியாக போர்ஷோர் எஸ்டேட் பேருந்து நிலையம் செல்ல தடைசெய்யப்பட்டு, ஆர் மற்றும் தெற்கு கால்வாய்கரை சாலை வழியாகவும் திரும்பி வரும் போது மந்தைவெளி பஸ் நிறுத்தம் வரை வழக்கம் போல்  வந்து, வெங்கடகிருஷ்ணா சாலை மற்றும ஆர்.கே.மட்சாலை வழியாக செல்ல வேண்டும்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

சிஜேபி போராட்டம்.. கைதுகள் கூடாது.. மெட்ரோ ரயில்களை நிறுத்த கூடாது.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

சிஜேபி தலைவர் அபிஜித் பாட்டி மறைவு.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட டெல்லி போலீஸ்..

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

அடுத்த கட்டுரையில்
Show comments