பரந்தூர் வரை மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு: தமிழக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தை விரைவில் விமான நிலையம் வரவுள்ள பறந்தவூர் வரை நீடிக்க திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், மாயவரம் இருந்து கோயம்பேடு வழியாக சோளிங்கநல்லூர் வரையிலான ஐந்தாவது வழித்தடத்தை, கோயம்பேட்டிலிருந்து ஆவடி வரை நீடிக்கவும் திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நீடிப்பு திட்டங்களுக்கு கடந்த ஆண்டு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை பரிசீலனையில் உள்ளது, முடிந்தவுடன் ஒப்புதல் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் படி, மெட்ரோ ரயில் பூந்தமல்லியில் இருந்து தொடங்கி செம்மரபாக்கம், தண்டலம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் வழியாக பறந்து ஒரு விமான நிலையம் சென்றடையும். இந்த வழித்தடத்தில் மொத்தம் 52 கி.மீ. தொலைவில் 20 ரயில் நிலையங்கள் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran