1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னை ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 14 பேர்: அதிர்ச்சி தகவல்

சென்னை ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 14 பேர்: அதிர்ச்சி தகவல்
 சென்னையில் உள்ள ரயில் நிலைய லிப்ட்டில் 14 பேர் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் முதல் தளத்தையும் இரண்டாவது தளத்தையும் இணைக்கும் லிப்டில் நேற்று 7 ஆண்கள் 6 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என 14 பேர் ஏறினார்கள் 
 
அந்த லிப்ட் சென்று கொண்டிருக்கும்போது திடீரென இயங்கவில்லை. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த லிப்டில் இருந்தவர்கள் உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்ட போதிலும் உதவி கிடைக்கவில்லை
 
இதனால் அவர்கள் அபயக்குரல் எழுப்பினர். இதனை அடுத்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து லிப்டில் உடைத்து 14 பேரையும் பத்திரமாக மீட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் லிப்ட்டில் சிக்கிய 14 பேர்களால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது