8 மாவட்டங்களில் மழை கன மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

rain
8 மாவட்டங்களில் மழை கன மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
siva| Last Updated: ஞாயிறு, 4 ஜூலை 2021 (07:12 IST)
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை குறித்த விவரங்களை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது என்பதும் அந்த அறிவிப்பின்படி பல இடங்களில் மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன் இன்றைய மழை குறித்த விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை பார்ப்போம்.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும், ஈரோடு, திருப்பூர், மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :