1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center says about rain

5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

meteorological
தமிழகத்தில் தினந்தோறும் மழை குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வரும் நிலையில் இன்று ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது
 
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அதேபோல் தேனி திண்டுக்கல் தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று அறிவித்து மேலும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
 
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது
 
 
அடுத்த கட்டுரையில்
மருமகள் தலையை வெட்டி எடுத்து வந்த மாமியார்! – அதிர்ச்சியில் உறைந்த காவல் நிலையம்!