1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai highcourt says about senthil balaji case

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு: சென்னை உயர் நீதிமன்றம்

செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
சமீபத்தில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடுத்த நிலையில் அந்த வழக்கு எம்பி எம்எல்ஏக்கள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கை எம்பி எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது 
 
மேலும் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து கோப்புகளையும் முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றவும் ஜாமின் மனுவை விரைந்து விசாரிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைவிரித்தாடுகிறது: 4 பேர் கொலை குறித்து டிடிவி தினகரன்..!