திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (12:16 IST)

உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்..!

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர் பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது. 
 
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு எது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்காமல் விட்டது காவல்துறையினர் தங்களுடைய கடமையை புறக்கணித்தது போன்றது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் எந்த மதத்திற்கும் எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran