செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2024 (12:30 IST)

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம்..!

highcourt
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் 8ஆம் தேதி நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் 3 புதிய சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.
 
இந்த நிலையில் ஜூலை 8ல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
முன்னதாக நாடாளுமன்றத்தில் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குற்றவியல் சட்டங்களுக்கு ’பாரதிய நியாய சன்ஹிதா’ என இந்தி, சமஸ்கிருதம் கலந்து பெயர் வைத்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக புதிய குற்றவியல் சட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருதத்தில் பெயரிட்டிருப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் தற்போது இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் போராட்டம் நடத்தவுள்ளனர்.
 
Edited by Mahendran