பெற்றோர் சொத்தில் பிள்ளைக்கு உரிமை இல்லை! – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
மும்பையில் வழக்கு ஒன்றில் பெற்றோர்கள் சொத்தை பிள்ளை உரிமை கோர முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ஃபாசில் கான். இவருக்கு சோனியா என்ற மனைவியும், ஆசிஃப் கான் என்ற மகனும் உள்ளனர். சமீபத்தில் ஃபாசில் கான் உடல்நலக் குறைவால் படுத்தப்படுக்கையான நிலையில் அவரது சொத்துகளை நிர்வகிக்கும் உரிமை கோரி நீதிமன்றத்தி விண்ணப்பித்துள்ளார் அவரது மனைவி சோனியா.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சொத்தில் தனது பங்கை அளிக்க வேண்டும் என ஆசிஃப் கான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போது அவர்களது சொத்தை வாரிசுகள் கோர முடியாது என கூறி, சொத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சோனியாவிற்கு அளித்துள்ளனர்.