புதுவை விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியால் வந்த நபரால் பரபரப்பு.. என்ன நடந்தது?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், ஒரு நபர் கைத்துப்பாக்கியுடன் நுழைந்ததால் புதுச்சேரி துறைமுக மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு, விஜய் கலந்துகொண்ட இந்த இரண்டாவது கூட்டத்தில், 5,000 பேருக்கு மட்டுமே க்யூ.ஆர். குறியீடு அனுமதி அட்டை வழங்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இன்று கூட்டம் நடைபெறும் இடத்தின் பிரதான நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடைபெற்றபோது, வெள்ளை சட்டை அணிந்திருந்த ஒரு நபரின் இடுப்பு பகுதியில் துப்பாக்கி இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். உடனடியாக அவரை காவலர்கள், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில், அந்த நபரின் பெயர் டேவிட் என்றும், அவர் த.வெ.க.வின் முக்கிய நிர்வாகியான பிரபு என்பவரின் பாதுகாப்பு அதிகாரி என்றும் தெரியவந்தது. இருப்பினும், அவர் பொதுக்கூட்டத்திற்கு ஏன் துப்பாக்கி கொண்டு வந்தார், அதற்கான உரிமம் உள்ளதா என்பது குறித்து மூத்த காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
Edited by Siva