வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (11:58 IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு! – 6 மாதத்தில் முடிக்க உத்தரவு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில் 6 மாதத்திற்குள் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் படம் எடுத்து மிரட்டிய வழக்கில் அப்போதைய அதிமுக நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில் ஜாமீன் கேட்டு அருளானந்தம் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து புதிய உத்தரவு பிறப்பித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தினசரி விசாரித்து 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டுமென கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.