1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (13:23 IST)

11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

கொரோனா வைரஸ் காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 11,12ஆம் வகுப்பு  பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்வு நேரத்தை அரை மணி நேரம் தாமதமாக துவங்க நீதிபதிகள் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். 
 
அதுமட்டுமின்றி சென்னை, ஈரோடு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேர்வு எழுத வரும் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பேருந்து வசதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்
 
இதனை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதையடுத்து 11,12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது