1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (16:45 IST)

சரக்கு சோக்கு கேக்குதோ! – கேரள நபருக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

கொரோனா அச்சுறுத்தலால் கேரளா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் ஆன்லைனில் மது விற்க கோரி ஆசாமி ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் கேரளாவிலும் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் திரயரங்குகள், கேளிக்கை விடுதிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகரங்கள் பலவற்றில் மதுக்கடைகள் சிலவற்றை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருவர் கேரள நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிவதால் மது வாங்க காலதாமதம் ஆவதாகவும், மேலும் பலரோரு காத்திருப்பதால் கொரோனா பரவு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி ஆன்லைன் மூலம் மது ஆர்டர் செய்தால் வீட்டில் டெலிவரி செய்ய வசதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் மக்கள் அதிகம் வெளியே நடமாட வேண்டாம் என கூறி அரசுகள் ஆலோசனை கூறி வரும் நிலையில், ஆன்லைன் மூலம் மது டெலிவரி செய்ய சொல்லி ஆசாமி வைத்த கோரிக்கை நீதிமன்றத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் நிலவி வரும் அசாதரண சூழலில் மதுவை வீட்டில் டெலிவரி செய்வது மிகவும் அவசியமோ? என மனுதாரரை கேள்வியெழுப்பியுள்ள நீதிமன்றம். மனு அளித்தவருக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. மேலும் தண்டனையும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.