வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (07:15 IST)

அசையாமல் நின்று சிரிக்க வைத்த விஜிபி தாஸ் கொரோனாவுக்கு பலி!

அசையாமல் நின்று சிரிக்க வைத்த விஜிபி தாஸ் கொரோனாவுக்கு பலி!
சென்னை விஜிபி கடற்கரையான கோல்டன் கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் முதன் முதலில் பார்ப்பது வாயில் அருகே உள்ள அசையாமல் நிற்கும் ஒருவரைத்தான்
 
சுற்றுலா பயணிகள் என்ன சொன்னாலும் அசையாமல் இருப்பார். காது கேட்காதவன் என்று கூட கேலி செய்தாலும் கூட அவரை பேச வைப்பது என்பது முடியாத காரியம் 
 
கடந்த 30 ஆண்டுகளாக சென்னை விஜிபி கோல்டன் கடற்கரையில் அசையாமல் இருந்து அனைவரையும் சிரிக்க வைத்தவர் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை அசையாமல் நின்று சிரிக்க வைத்த இந்த தாஸ் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்
 
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. சென்னை விஜிபி கோல்டன் கடற்கரையில் கடந்த 30 ஆண்டுகளாக யாராலும் சிரித்து வைக்க முடியாத கற்சிலையாக நின்று கொண்டிருந்த தாஸ் அவர்களைக் கொரோனா பலியாக்கியுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது
 
தாஸின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்றும் அவரது சேவை மிகுந்த அற்புதமானது என்றும் சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்னை கோல்டன் பீச் நிர்வாகிகள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது