1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Music director SS Thaman wondered vijay with composition

விஜய் 65 அப்டேட்… விஜய்யை வியக்கவைத்த தமனின் பாட்டு!

ஏஆர் முருகதாஸ்
விஜய் 65 படத்தின் வேலைகள் சத்தமில்லாமல் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளார் . இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த படம் பொங்கலுக்குப் பின்னர்தான் ஆரம்பிக்கப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் சத்தமில்லாமல் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய் படத்துக்கு முதன் முதலாக இசையமைக்கும் தமன் இந்த படத்துக்கான முதல் பாடலை கம்போஸ் பண்ணி முடித்து விட்டாராம். அதை இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜய்க்கு அனுப்பி வைத்துள்ளார். பாடலைக் கேட்ட விஜய் அது மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளாராம்.
அடுத்த கட்டுரையில்
பாட்டி-பேத்தியாக உஷா உதுப் - அக்சராஹாசன் நடித்த பட டைட்டில் அறிவிப்பு