செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 மே 2019 (07:59 IST)

3வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி: செல்போனால் ஏற்பட்ட விபரீதம்!

சென்னையில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் மூன்றாவது மாடியில் செல்போன் பேசியபடி நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென தவறி விழுந்ததால் படுகாயம் அடைந்தார்.
 
சென்னை அயனாவரம் பகுதியில் வடக்கு மாட வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 3வது மாடியில் நின்று 16 வயது மாணவி ஒருவர் செல்போன் பேசியபடி அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அப்போது செல்போனில் பேசிய மும்முரத்தில் திடீரென தடுப்புச்சுவரில் தடுக்கி, மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். 
 
மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் மாணவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த மாணவியை சென்னை  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். படுகாயம் அடைந்த மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
 
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். உண்மையில் மாணவி தடுக்கி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது