1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (21:12 IST)

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்குவது எப்போது?

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்குவது எப்போது?
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் உள்ள தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி நடைபெறும் என்பது அறிந்ததே 
 
இந்த நிலையில் நாற்பத்து ஏழாவது சுற்றுலா மற்றும் பொருட்காட்சி ஜனவரி மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெறும் பொருட்காட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு மாநில அரசு நிறுவனங்கள் இந்த அரங்குகளில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த பொருட்காட்சியில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடித்த பல்வேறு விளையாட்டுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் பொருட்காட்சி நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூபாய் 35 சிறுவர்களுக்கு ரூபாய் 20 மாணவர்களுக்கு ரூபாய் 20 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது