Daily Horoscope
✕

மாஞ்சா பட்டம் விட்டால் குண்டாஸ் பாயும்! – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 28 மே 2020 (12:08 IST)
சென்னையில் மாஞ்சா கயிறுகளை உபயோகித்து பட்டம் விடுவது அதிகரித்துள்ள நிலையில், அவ்வாறாக பட்டம் விடுபவர்கள் மீது ‘குண்டாஸ்’ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாஞ்சா நூல் கட்டி பட்டம் விடுவதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. கண்ணாடி துகள்களை வைத்து தயாரிக்கப்படும் மாஞ்சா நூல்களை பட்டம் விட பயன்படுத்தும் போது சில சமயங்களில் பட்டம் அறுந்து பொதுமக்கள் கழுத்தில் சிக்கி உயிரிழப்பு போன்ற விபரீதமான முடிவுகள் ஏற்பட காரணமாகின்றன. இந்நிலையில் தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் வீடுகளில் முடங்கியுள்ள பல சிறுவர்களும், இளைஞர்களும் மாஞ்சா நூலில் பட்டம் விட தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மாஞ்சா நூல்களை கட்டி பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும். மாஞ்சா பட்டம் விடுபவர்கள் ‘குண்டாஸ்’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதுடன் கடுமையான தண்டனைகளும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

எல்லாம் காட்டு

கூட்டணியிலிருந்து வெளியேறும் கம்யூனிஸ்ட்டுகள்?!.. தவெக அடுத்த மூவ் என்ன?...

பஸ்ல போகும் ஆண்களின் நிலைமை கொடுமை!.. தாய்மாமன் புகழ் ஓங்குக!.. புளூசட்ட மாறன் நக்கல்...

இந்த பஸ்ல ஏன் நீங்க ஏறினீங்க?.. வெற்றிப்பயண திட்டத்தால் ஆண்களுக்கு வந்த சோதனை....

அரசின் தலைவராக 25 ஆண்டுகள்!.. நரேந்திர மோடி சாதனை...

கூகுள் பிக்சல் 10a ஸ்மார்ட்போன் விலை ரூ. 6,000 அதிரடி உயர்வு..இந்தியாவில் இன்றைய விலை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments