திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 மே 2020 (11:15 IST)

11,640 பாதிப்புகள்; பாதி பேர் குணமடைந்தனர்! – மெல்ல திரும்புமா சென்னை?

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

நேற்று தமிழகத்தில் 605 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது. 5,504 பேர் குணமடைந்துள்ள நிலையில் 89 பேர் பலியாகியுள்ளனர். 

சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,640 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை பொருத்த வரை சென்னையின் 15 மண்டலங்களில் 5 மண்டலங்கள் 1,000 பாதிப்பை தாண்டியுள்ளது. ஆம், அதிகப்பட்சமாக ராயபுரத்தில் 2,145, கோடம்பாக்கத்தில் 1,525, திரு.வி.க.நகரில் 1,285, தேனாம்பேட்டையில் 1,262, தண்டையார்பேட்டையில் 1,160, அண்ணா நகரில் 975, வளசரவாக்கத்தில் 758, அடையாறில் 653 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.