ஞாயிறு, 28 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2023 (12:56 IST)

சென்னையில் திமுக பிரமுகர் கொலை.. வீடு புகுந்து வெட்டிய மர்ம நபர்கள்..!

சென்னையில் திமுக பிரமுகர் கொலை.. வீடு புகுந்து வெட்டிய மர்ம நபர்கள்..!
சென்னை திருவொற்றியூர் அருகே திமுக பிரமுகர் காமராஜை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
 
விம்கோ நகரில் உள்ள காமராஜின் வீட்டை காலிங் பெல்லை அடித்ததும் கதவை திறந்தார் காமராஜ். கதவை திறந்ததும் 6 பேர் கொண்ட கும்பல் காமராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர் 
 
காமராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி காமராஜ் உயிரிழந்தார் 
 
திமுக பிரமுகர் காமராஜ் அரசு ஒப்பந்ததாரராக இருந்தார் என்று கூறப்படும் நிலையில் இந்த கொலை குறித்து எண்ணூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
 
Edited by Mahendran