திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (09:51 IST)

டெங்கு காய்ச்சல் எதிரொலி; தூய்மையற்ற வீடுகளுக்கு அபராதம்! – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

Chennai Corporation
சென்னையில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலியான நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



மழைக்காலம் வந்தாலே டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுகள் ஏற்படுகிறது. சமீபத்தில் சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சிறுவனின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

சென்னையில் டெங்கு பாதிப்புகளை தடுக்கவும், கொசு உற்பத்தியை ஒழிக்கவும் சென்னை மாநகராட்சி பல நடவடிக்கைகளை முடுக்கியுள்ளது. மேலும் குடியிருப்புகளில் கொசு உற்பத்தியாகும் வகையில் தூய்மையற்ற சூழல் நிலவினால் வீடு மற்றும் குடியிருப்பு உரிமையாளருக்கு ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் மக்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K