திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (14:55 IST)

அந்த டீ-சர்ட்டை கழட்டிட்டு வர கூடாதாய்யா; ஏடிஎம் கொள்ளையடிக்க வந்த அமெச்சூர் திருடன்!

தென்காசியில் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க சென்ற அமெச்சூர் திருடன் ஒருவன் தனது டீசர்ட்டால் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி பகுதியில் காவலர் இன்றி ஏடிஎம் ஒன்று இருந்துள்ளது. அங்கு வந்த இளைஞர் ஒருவர் காவலர் இல்லாததை கண்டு ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் லாக்கரை திறக்க முடியாததால் அங்கிருந்து சென்றுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் திருடனை பிடிக்க போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் திருட வந்தவரின் டீசர்ட்டில் சின்ன அளவில் அவரது பெயர் இருந்தது தெரிய வந்துள்ளது. அதை வைத்து துப்பு துலக்கிய போலீசார் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்ற இசக்கி மகன் 19 வயதான முத்து என்பவர் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து முத்துவை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.