1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 அக்டோபர் 2021 (15:58 IST)

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்: சென்னை கமிஷனர் உத்தரவு

தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேர கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்பு ஒரு சில நாட்களுக்கு முன் இந்த அறிவிப்பு வெளிவரும் நிலையில் சற்று முன்னர் சென்னை போலீஸ் கமிஷனர் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் சங்கத்தில் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்